உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை மயிலாப்பூர்வாசிகள் கடும் அதிருப்தி

போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை மயிலாப்பூர்வாசிகள் கடும் அதிருப்தி

மயிலாப்பூர், பல ஆண்டுகளாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக உள்ள சாலையால், மயிலாப்பூர்வாசிகள் அவதியடைந்து வருகின்றனர்.மயிலாப்பூர், கபாலி தோட்டம் மற்றும் பூந்தோட்டம் பகுதி மக்கள், பறக்கும் ரயில் நிலையம் மற்றும் சாய்பாபா கோவில் செல்லும் வகையில், 50 ஆண்டுகளுக்கு முன், அங்கு சிறு இணைப்பு பாலம் அமைக்கப்பட்டது.அதையொட்டி சாலையும் உள்ளது. ஆனால், இந்த பாலம் மற்றும் சாலை தற்போது, பயணிக்க முடியாத வகையில் லாயக்கற்ற நிலையில் உள்ளன.குண்டும், குழியுமான சாலையில் வாகனங்கள் குலுங்கி குலுங்கி செல்வதால், விபத்து அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:மயிலாப்பூர் பகுதி கபாலி தோட்டம் மற்றும் பறக்கும் ரயில் நிலையம், சாய்பாபா கோவில் செல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன் சிறு இணைப்பு பாலம் அமைக்கப்பட்டது.தற்போது அந்த பாலம் பயனற்றதாக உள்ளது. அதையொட்டி உள்ள சாலை குண்டும், குழியுமாய் பல்லாங்குழி போல் காட்சி அளிக்கிறது.பல முறை இது தொடர்பாக புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் சிரமப்படுகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை