உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆதரவற்றவரை சிகிச்சைக்கு அனுப்பிய போலீசார்

ஆதரவற்றவரை சிகிச்சைக்கு அனுப்பிய போலீசார்

பெரம்பூர், ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்,40. மனைவி மற்றும் பிள்ளைகள் இவரை வீட்டை விட்டு துரத்திய நிலையில், பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா அருகே உள்ள நடைபாதையில் வாழ்க்கையை கழித்து வந்தார்.நேற்று மாலை காலில் காயத்துடன் நடக்க முடியாமல் அவதிப்பட்ட அவரை, அப்பகுதியில் ரோந்து பாதுகாப்பில் இருந்து ஐ.சி.எப்., காவல்நிலைய போலீசார் 108 அவசர ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து, சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அரசமர விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரும் அன்னதானம் மற்றும் தன்னார்வலர்கள் தரும் உணவுப்பொட்டலங்களை எதிர்பார்த்து பெரம்பூர் பூங்காவை சுற்றியுள்ள பகுதியில், ஆதரவற்றோர் பலரும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதியில் இருந்தும் மூட்டை முடிச்சுகளுடன் இங்கு வரும் வயதான நபர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரும் உணவுப்பொட்டலங்களை வாங்கி பசியை போக்கிக் கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ