உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாலி அறுத்த போலீசுக்கு கட்டி வைத்து தர்ம அடி 

தாலி அறுத்த போலீசுக்கு கட்டி வைத்து தர்ம அடி 

ஆவடி, ஆவடி, பக்தவத்சலபுரத்தைச் சேர்ந்த ஜெயராஜின் மனைவி ராதா, 55, தன் வீட்டருகே மளிகை கடை வைத்துள்ளார்.இவரது கடைக்கு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொக்கர், 32, என்பவர் வந்துள்ளார். கடையில் பொருள் வாங்குவது போல் நடித்து, ராதா அசட்டையாக இருந்த நேரம் பார்த்து, அவரது கழுத்தில் இருந்த 15 சவரன் தாலிச்செயினை பறித்து தப்பி ஓடினார்.ராதாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பொக்கரை துரத்தி பிடித்தனர்; தர்ம அடி கொடுத்து, மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். பின், ஆவடி காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணையில், பிடிபட்ட பொக்கர்,தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவில் எட்டாவது பட்டாலியனில் போலீசாக இருப்பதும், பணி நிமித்தமாக சென்னைக்கு வந்ததும் தெரிந்தது. மேலும், தாலிச்செயின் பறிப்பில் ஈடுபடவில்லை எனவும் பொக்கர் தெரிவித்துள்ளார். சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ