உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிப்பறி திருடர்கள் கைது

வழிப்பறி திருடர்கள் கைது

புளியந்தோப்பு, புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணன், 40; சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் வேலை முடித்து, புளியந்தோப்பு தாஸ் நகர் முதல் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.அப்போது, இவரை வழிமறித்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி, நாராயணனிடமிருந்து 1,500 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜீவா, 24 மற்றும் பட்டாளம் பகுதியைச் சேர்ந்த ஜவகர், 23, ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ