உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வங்கியில் புகுந்த பாம்பு

வங்கியில் புகுந்த பாம்பு

ஆவடி, ஆவடி அடுத்த பட்டாபிராம், ஐ.ஏ.எப்., சாலை, இந்து கல்லுாரி வளாகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது.நேற்று முன்தினம் மாலை, 'கேஷியர்' அறையில் இருந்த பணம் எண்ணும் இயந்திரத்தில் இருந்து, பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.அதிர்ச்சி அடைந்த ஊழியர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். வங்கிக்கு வந்த ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனத்தினர், இயந்திரத்தில் இருந்த பாம்பை பத்திரமாக மீட்டு, வனப்பகுதியில் விடுவித்தனர்.மூன்றடி நீளம் கொண்ட அந்த பாம்பு, கொம்பேறி மூக்கன் என தெரிந்தது. விஷமற்ற இந்த பாம்பு, மரம் ஏறும் தன்மை கொண்டது.மரத்தில் இருந்து ஸ்டோர் ரூம் வழியாக வங்கிக்குள் புகுந்து பணம் எண்ணும் இயந்திரத்தில் நுழைந்திருக்கலாம் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ