உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவரிடம் ரூ. 8.50 லட்சம் பறிமுதல்

மாணவரிடம் ரூ. 8.50 லட்சம் பறிமுதல்

வண்ணாரப்பேட்டை, மின்ட், கண்ணன் ரவுண்டானா சந்திப்பில், வண்ணாரப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியே 'பைக்'கில் சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபரை நிறுத்தி சோதனையிட்டனர். அவரிடம் 8.50 லட்சம் ரூபாய் இருந்தது.விசாரணையில் அவர், தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த சேரன், 20, என்பதும், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. மேலும் அவர் படித்துக்கொண்டே, பர்மா பஜாரில் உள்ள பக்ருதீன் என்பவருக்குச் சொந்தமான மொபைல்போன் கடையில், பகுதி நேரமாக வேலை செய்கிறார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, சேரனிடம் 8.50 லட்சம் ரூபாயை கொடுத்த பக்ருதீன், வீட்டில் வைத்து மறுநாள் காலை வரும் போது கொண்டு வருமாறு தெரிவித்துள்ளார்.ஆனால், சேரன் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து, தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை