உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெரினா கடற்கரையில்நீச்சல் குளம் மூடப்பட்டது

மெரினா கடற்கரையில்நீச்சல் குளம் மூடப்பட்டது

சென்னை, பராமரிப்புக்கான ஒப்பந்தம் முடிந்ததால் மெரினா நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளது.சென்னை மெரினா கடற்கரையில் காலை மற்றும்மாலை நேரங்களில், 500க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்து வருகின்றனர். மேலும் சிலர் மெரினா நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மெரினா நீச்சல் குளத்திற்கான பராமரிப்பு ஒப்பந்தம், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது. புது ஒப்பந்தம் இன்னும் விடப்படாததால், மெரினா நீச்சல் குளத்தை தற்காலிகமாக மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். 'தற்காலிகமாகவே, நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளது. புது ஒப்பந்தம் முடிவானதும் மீண்டும் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்' என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை