உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மது குடித்து மயங்கியவர் பலி

மது குடித்து மயங்கியவர் பலி

வேளச்சேரி:வேளச்சேரி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 30; கார்பென்டர். திருமணம் ஆகவில்லை. தினமும் மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.மது போதைக்கு அடிமையான இவர், நேற்று முன்தினம், வேளச்சேரியில் அதிகமாக மது குடித்துவிட்டு, சாலையோரம் மயங்கி விழுந்தார். நீண்ட நேரமாக கிடந்ததால், பகுதிமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்று பார்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. போலீசார், உடலை, பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி, மரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி