உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3வது மாடியில் இருந்து குதித்த பெண் சீரியஸ்

3வது மாடியில் இருந்து குதித்த பெண் சீரியஸ்

கண்ணகிநகர், கண்ணகிநகரை சேர்ந்தவர் நிஷா, 28. கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். இவரது தோழி வள்ளி. இவரின் கணவன் யுவராஜ். யுவராஜுக்கும், நிஷாவுக்கும் சில மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது தெரிந்து, வள்ளி கணவரை கண்டித்துள்ளார். இதனால், நிஷாவை பார்ப்பதையும், அவருடன் பேசுவதையும் யுவராஜ் நிறுத்தி உள்ளார். இதில் மனமுடைந்த நிஷா, நேற்று குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில், தலை, கால், கை, இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்து, அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கண்ணகிநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ