உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டீக்கடையில் கிண்டல் செய்தவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய பெண்

டீக்கடையில் கிண்டல் செய்தவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய பெண்

அண்ணா சதுக்கம்,திருவல்லிக்கேணி, மாட்டாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர், பிரேம்குமார் 30. நீச்சல் பயிற்சியாளர். இவர், அதே பகுதியில் உள்ள டீக்கடைக்கு தினமும் செல்வது வழக்கம். அந்த டீக்கடையில், டீக்கடை உரிமையாளர் உறவினரின் 24 வயது இளம் பெண் வேலை பார்க்கிறார். டீ குடிப்பதற்காக பிரேம்குமார் செல்லும் நேரங்களில், அங்கு வேலை பார்க்கும் இளம் பெண்னை, அடிக்கடி 'கிண்டல்' செய்து வந்துள்ளார். இதை அவ்வப்போது அப்பெண் கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு டீ குடிக்க சென்ற பிரேம்குமார், வழக்கம் போல் இளம்பெண்னை 'கிண்டல்' செய்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த இளம் பெண், கடையில் கொதித்து கொண்டிருந்த பாலை, டம்ளரில் எடுத்து பிரேம்குமார் மீது ஊற்றினார். இதில், பிரேம்குமாரின் மார்பு மற்றும் தோள்பட்டை பகுதியில் காயமடைந்தது. அங்கிருந்தோர், அவரை மீட்டு, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அண்ணா சதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ