உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இஷ்டத்திற்கு வடிகால் பணிகள் மடிப்பாக்கத்தில் கடும் எதிர்ப்பு

இஷ்டத்திற்கு வடிகால் பணிகள் மடிப்பாக்கத்தில் கடும் எதிர்ப்பு

பருவமழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் பகுதியாக மடிப்பாக்கம் உள்ளது. 5 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி, மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை இருக்கிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, மடிப்பாக்கம் முழுதும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.ஆனால், ஒப்பந்ததாரர்கள் முறையாக, ஸ்திரத்தன்மையுடன் மழைநீர் வடிகால் அமைப்பதில்லை எனவும், தங்கள் விருப்பத்திற்கு அமைப்பதாகவும், அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:வடிகால் அமைக்கும் சாலையோரத்தில் மின் கம்பங்கள் இருந்தால், அதை அத்துறை வாயிலாக முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும்.அதேபோல, மரங்கள் இருந்தால், அதை வேரோடு பிடுங்கி, வேறு இடத்திற்கு மாற்றி வடிகால் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இந்த விதிமுறைகளின்படி பணிகளை மேற்கொள்வதாக ஒப்பந்ததாரர்கள் உத்தரவாதம் அளிக்கின்றனர்.ஆனால், தண்ணீர் செல்லும் வாட்டம் பார்க்காமல், மின் கம்பங்களுக்கு இடையேயும், வீட்டு உரிமையாளர்கள் முறையாக 'கவனித்தால்' கம்பத்தைச் சுற்றி சாலையிலும், வடிகால் பணிகளை தங்கள் இஷ்டத்திற்கு செய்கின்றனர்.உறுதி தன்மையின்றி காணப்படும் இந்த வடிகால், சாலையில் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கனரக வாகனங்கள் செல்லும் போது, உள்வாங்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இதை கண்காணிக்க வேண்டிய சம்பந்தப்பட்ட அலுவலர்கள், பணி நடக்கும் இடங்களில் வந்துகூட பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- -நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை