மேலும் செய்திகள்
3 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
27-Aug-2024
ரேஷன் அரிசி பறிமுதல்
21-Aug-2024
செங்குன்றம்,வண்டலுார் - மீஞ்சூர் -வெளிவட்ட சாலையில், செங்குன்றம் அடுத்த காந்திநகர் பகுதியில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, நெமிலிச்சேரி நோக்கி வந்த லாரி ஒன்றை மடக்கி சோதனை செய்த போது, மூட்டை மூட்டையாக, 5 டன் ரேஷன் அரிசி இருந்தது. இதைத்தொடர்ந்து, ரேஷன் அரிசியை கடத்த முயன்ற செங்குன்றத்தைச் சேர்ந்த பிரேம்குமார், மணிகண்டன் என்கிற போண்டாமணி, லாரி ஓட்டுனரான, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கவியரசன் ஆகிய மூவரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், காஞ்சிபுரத்தில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர் ஒருவரிடம் அதிக விலைக்கு விற்க, ரேஷன் அரிசியை கடத்தியது தெரிந்தது. மூவரிடமும், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Aug-2024
21-Aug-2024