உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / யுடியூபர்ஸ் மூவர் கைது

யுடியூபர்ஸ் மூவர் கைது

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த, 23 வயது கல்லுாரி மாணவி, ஏழு மாதத்திற்கு முன், வி.ஆர்.,மாலுக்கு தோழியருடன் சென்றிருந்தார். அப்போது, தனியார் யுடியூப் சேனலை சேர்ந்தவர்கள், 'காதல் சம்பந்தமாக ஜாலியாக ஒரு பேட்டி கொடுக்கும்படியும், இதை பதிவிடமாட்டோம்' எனக் கூறியுள்ளனர்.இதை நம்பி, மாணவி பேட்டி கொடுத்துள்ளார். இரட்டை அர்த்தம் கொண்ட இந்த வீடியோ, தற்போது 'யுடியூப்' சேனலில்பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி, தற்கொலைக்கு முயன்றார். விசாரித்த போலீசார், யூடியூப் சேனல் உரிமையாளர் ராம், 21, ஸ்வேதா, 23, யோகராஜ், 21, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை