உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தைராய்டு புற்றுநோய் டாக்டர்கள் எச்சரிக்கை

தைராய்டு புற்றுநோய் டாக்டர்கள் எச்சரிக்கை

சென்னை, “தொண்டையில் திடீரென ஏற்படும் கட்டி, வீக்கம் ஆகியவை, தைராய்டு புற்றுநோய் கட்டியாக இருக்கலாம்,” என, டாக்டர் நந்தகுமார் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து, பொது மருத்துவ துறை டாக்டர் ஆர்.நந்தகுமார் கூறியதாவது:தைராய்டு புற்றுநோயால் ஆண்டுக்கு 400க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில், 80 சதவீதம் தீவிர ஆபத்து தன்மை இல்லாமல் உள்ளது. இந்த தைராய்டு புற்றுநோய் வலியற்ற நிலையில், கழுத்தின் முன் பகுதியில் வலி, வீங்கிய நிணநீர் கணுக்கள், குரல் கரகரப்பு, எடையிழப்பு, பசியின்மை, சுவாசிப்பதிலும், விழுங்குவதிலும் சிக்கல் போன்ற அறிகுறிகளாக உள்ளன.தைராய்டு புற்றுநோயை உடல் பரிசோதனை, ரத்த பரிசோதனை, தைராய்டு அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பரிசோதனைகள் வாயிலாக கண்டறிய முடியும்.தொண்டையில் கட்டி அல்லது வீக்கத்தை உணர்ந்தால், டாக்டரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். அவற்றை சாதாரண கட்டியாக கருத வேண்டாம். அவை தைராய்டு புற்றுநோயாக இருக்கலாம். ஆரம்ப நிலையில் கண்டறிந்து, மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றால் குணப்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்