உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டி.என்.சி.ஏ., சாம்பியன்ஸ் டி-20 கோமளீஸ்வரர் சி.சி., சாம்பியன்

டி.என்.சி.ஏ., சாம்பியன்ஸ் டி-20 கோமளீஸ்வரர் சி.சி., சாம்பியன்

சென்னை, டி.என்.சி.ஏ.,வின் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ் டி - 20 கிரிக்கெட் போட்டியில், கோமளீஸ்வரர் சி.சி., அணி சாம்பியன் கோப்பை வென்றது.டி.என்.சி.ஏ.,வின் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ் டி -20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, பகல் - இரவு ஆட்டமாக, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில். எஸ்.கே.எம்., சி.சி., - கோமளீஸ்வரர் சி.சி., அணிகள் மோதின.'டாஸ்' வென்ற எஸ்.கே.எம்., அணி, 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு, 150 ரன்களை அடித்தது. அடுத்து 'பேட்' செய்த கோமளீஸ்வரர் சி.சி., அணி, 19.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 154 ரன்கள் அடித்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது. அணியின் வீரர் ராஜேஷ், 58 பந்துகளில் ஒரு சிக்சர், நான்கு பவுண்டரியுடன், ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் அடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை