மேலும் செய்திகள்
இன்று இனிதாக (14.08.2024)
14-Aug-2024
ஆன்மிகம் திருவிளக்கு பூஜைகாலை 9:30 மணி. இடம்: சக்தி விநாயகர் கோவில், மெட்ரோ நகர், ஆலப்பாக்கம், போரூர். மண்டலாபிஷேகம்கோமளாம்பிகை உடனுறை கோமளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம், காலை 8:30 மணி, மாலை 5:30 மணி. இடம்: எழும்பூர், கோமளீஸ்வரன்பேட்டை.பொது கிருஷ்ண தரிசனம் கண்காட்சிகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பூம்புகார் நிறுவனம் சார்பில், 'கிருஷ்ண தரிசனம்' விற்பனை கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடங்கள்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை மற்றும் பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை, சென்னை. சித்சபா மணிக்கூடம் ஆண்டு விழாதிருவாசக விண்ணப்பம், சிவதாமோதரன் சொற்பொழிவு; பிரபாகர மூர்த்தி, திருச்சிற்றம்பலம், சான்றிதழ் வழங்கல், மாலை 2:00 மணி முதல். இடம்: நீலாம்பாள் மகால், பள்ளிக்கரணை. கோவில் குளம் துாய்மைஜல ரக்ஷணா சார்பில், கபில தீர்த்தகுளம் துாய்மைப்படுத்தும் பணி, காலை 9:00 மணி முதல். இடம்: தேனுபுரீஸ்வரர் கோவில், மாடம்பாக்கம். சொற்பொழிவுசிவநேயப் பேரவை சார்பில், கலை இலக்கியம், சொற்பொழிவு: நுால் நயம் கவியரங்கம் - தொண்டு, காலை 9:00 மணி, இடம்: அக்ஷயா மஹால், தில்லை கங்கா நகர், நங்கநல்லுார்.
14-Aug-2024