உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாம்பரம் வெளிவட்ட சாலையில் 96 ஏக்கரில் டவுன்ஷிப் திட்டம்

தாம்பரம் வெளிவட்ட சாலையில் 96 ஏக்கரில் டவுன்ஷிப் திட்டம்

சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதியில், பல்வேறு நிறுவனங்கள் சார்பில் குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இதில் பழைய மாமல்லபுரம் சாலை, தாம்பரம் - செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை, தாம்பரம் - ஒரகடம் சாலை ஆகிய வழித்தடங்களில், குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வண்டலுார் - மீஞ்சூர் இடையே, 63 கி.மீ., தொலைவிற்கு, வெளிவட்டச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சாலையை ஒட்டி, ரியல் எஸ்டேட் தொழில் மேம்பாட்டுக்கு நல்ல வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.எனவே, இந்த வழித்தடத்தை ஒட்டி நிலம் வாங்க, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் போட்டிப் போடுகின்றன. இதனால், இங்கு நிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில், அர்பன் ரைஸ் என்ற நிறுவனம், 19 ஆண்டுகளாக குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இந்நிறுவனம் வாயிலாக சென்னையில் சிறுசேரி, பழைய மாமல்லபுரம் சாலை, திருமழிசை, கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பெரிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக இந்நிறுவனம், வெளிவட்ட சாலையில் தாம்பரம் அருகில், 96 ஏக்கர் நிலத்தில், 'ஓபஸ்-96' என்ற பெயரில் குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கு முதற்கட்டமாக, 45 ஏக்கரில், 900 வீட்டு மனைகளுக்கான திட்டங்கள், விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.வணிகப் பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என, இப்பகுதியை தனி நகரியமாக மேம்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை