உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆதரவற்றோருக்கு உதவிகள் வழங்கிய அறக்கட்டளைகள்

ஆதரவற்றோருக்கு உதவிகள் வழங்கிய அறக்கட்டளைகள்

சென்னை, சென்னையில் ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகள், தொழு நோயாளிகளுக்கு பல்வேறு அறக்கட்டளை நிர்வாகத்தினர் இணைந்து, ஆடைகள் மற்றும் மருத்துவ உதவி பெட்டி உள்ளிட்டவற்றை வழங்கினர்.@புரசை உதவும் கைகள், எல்லோ கிராஸ் தொண்டு நிறுவனம், சென்னை சுற்றுலா கார் இயக்குனர்கள் சங்கம், உரத்த சிந்தனை அறக்கட்டளை, ஆதிநாத் அறக்கட்டளை, ரூட் லேம்ப் அறக்கட்டளை, ஆண்டாள் அறக்கட்டளை# உள்ளிட்டவற்றின் நிர்வாகிகள் இணைந்தது, சென்னையில் உள்ள தொழு நோயாளிகள், ஆதரவற்றோர், முதியோருக்கு ஆடைகள் மற்றும் உணவு, மருந்து பொருட்களை வழங்கினர்.இதில், சென்னை சுற்றுலா கார் இயக்குனர்கள் சங்கத்தின் தலைவரும், எல்லோகிராஸ் தொண்டு நிறுவன செயலருமான அன்பழகன், உரத்த சிந்தனை உதயம் ராம், ஆதிநாத் மோகன், ரூட் லேம்ப் லதா, ஆண்டாள் அறக்கட்டளையின் உமா மகேஷ்வரி, விவேகானந்தா பள்ளி முதல்வர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புரசை வெங்கடேஷ், பாலசுப்பிரமணி, சிவஸ்ரீ உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ