உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலீசை வெட்டிய இருவர் கைது

போலீசை வெட்டிய இருவர் கைது

நெமிலி, ராணிப்பேட்டை மாவட்டம், கீழ்வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன், 44; திருவள்ளூர், செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில், முதல் நிலை காவலர். நேற்று முன்தினம் அதே கிராமத்தில், கோவில் திருவிழா நடந்தது. அப்போது, அப்பகுதி சேதுபதி, 23, பிரதாப், 22, ஆகிய இருவரும், அறிவழகனிடம், மது அருந்துவதற்கு பணம் கேட்டுள்ளனர். அவர், பணம் தர மறுத்தால், தலை, கழுத்து ஆகிய பகுதியில், கத்தியால் வெட்டியுள்ளனர்.காயமடைந்த அறிவழகன், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ேசர்க்கப்பட்டார். சேதுபதி, பிரதாப் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை