உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவர்களை தாக்கிய ரவுடிகள் இருவர் கைது

மாணவர்களை தாக்கிய ரவுடிகள் இருவர் கைது

அமைந்தகரை, அமைந்தகரை, ஷெனாய் நகர் பகுதிகளைச் சேர்ந்த, 16 வயதுடைய இரு சிறுவர்கள், அதேபகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கின்றனர். இருவரும் ஒரே பெண்னை காதலித்து வந்ததால், அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பேசித் தீர்க்க, நேற்று இரு மாணவர்களும், அவர்களது நண்பர்களுடன், ஷெனாய் நகரில் உள்ள பூங்காவில் சந்தித்தனர்.அப்போது ஒருதரப்பு மாணவருடன் டி.பி.,சத்திரத்தைச் சேர்ந்த பல வழக்கில் தொடர்புடைய ரவுடி பரத், 25, பாஸ்கர், 21, ஆகியோர் வந்துள்ளனர். எதிர்தரப்பு மாணவருடன், அமைந்தகரையைச் சேர்ந்த தனியார் கல்லுாரி மாணவன் துளசிராம் 21 வந்துள்ளார்.அப்போது, இருதரப்பினருக்குள் வாக்குவாதம் முற்றியதால், ரவுடி பரத் மற்றும் பாஸ்கர் இருவரும், எதிர்தரப்பு பிளஸ் 2 மாணவன் மற்றும் துளசிராமனை சரமாரியாக தாக்கினர்.இதில், துளசிராம் தலையில் பலத்த காயமும், சிறுவனுக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. அமைந்தகரை போலீசார் ரவுடி பரத் மற்றும் பாஸ்கரனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ