உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விசாரணை கைதிகள் இருவர் விடுதலை

விசாரணை கைதிகள் இருவர் விடுதலை

காஞ்சிபுரம், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரீனா ஜாய்ஸ்மேரி, 42. வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம், 55. இவர்களை, மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என, காஞ்சிபுரம் மாவட்ட கியூ பிரிவு போலீசார், கடந்த 2016ல் ஸ்ரீபெரும்புதுாரில் கைது செய்தனர். மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்ததாக, இருவர் மீதும் புகார் எழுந்தது.வேலுார் சிறையில், இருவரும் விசாரணை கைதிகளாக இருந்தனர். இருவர் மீதும், காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில், கியூ பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.நீதிமன்ற விசாரணை முடிந்த நிலையில், இருவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனவும், நீண்ட நாட்கள் விசாரணை கைதிகளாக சிறையிலேயே இருந்ததால், இருவரையும் விடுதலை செய்து, நீதிபதி செம்மல் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை