உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டூ - வீலர் விபத்து மாஜி தலைவர் பலி

டூ - வீலர் விபத்து மாஜி தலைவர் பலி

ஸ்ரீபெரும்புதுார்:டூ - வீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாஜி அ.தி.மு.க., ஊராட்சி தலைவர் பலியானார்.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், தண்டலத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 62; அ.தி.மு.க., முன்னாள் ஊராட்சி தலைவர். நேற்று, 'ஹீரோ பேஷன்' பைக்கில் ஸ்ரீபெரும்புதுார் சென்றார்.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தண்டலம் சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார். பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் நோக்கி வந்த 'பஜாஜ் பல்சர்' பைக் வெங்கடேசன் மீது மோதியது.இதில், துாக்கி வீசப்பட்ட வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு பைக்கில் வந்த, சிவன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 27, பலத்த காயமடைந்தார்.ஸ்ரீபெரும்புதுார் போலீசார், ராஜேஷை மீட்டு ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு மருத்துவ பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை