மேலும் செய்திகள்
ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய ரவுடி கைது
12-Feb-2025
சென்னை, சென்னை, அசோக்நகர் புதுார், 7 வது தெருவைச் சேர்ந்தவர் அஜித்குமார், 27; ஆட்டோ ஓட்டுநர். நேற்று காலை கதீட்ரல் சாலை வழியாக சவாரி ஏற்றிச் சென்றார். கோபாலபுரம் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த கார், அவரது ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.ஆட்டோவில் பயணித்த ரஞ்சித்குமார், இளங்கோ, கந்தன், மகேஷ் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.அவ்வழியாக காரில் சென்ற துணை முதல்வர் உதயநிதி, விபத்தில் சிக்கியவர்களை பார்த்தார். காரை நிறுத்தச் சொன்ன அவர், காரில் இருந்து இறங்கி, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு குடிநீர் வழங்கி ஆசுவாசப்படுத்தினார். பின், முதலுதவி சிகிச்சைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சம்பவம் குறித்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
12-Feb-2025