உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெயர்ந்து விழுந்த சீலிங் அம்மன் கோவிலில் சலசலப்பு

பெயர்ந்து விழுந்த சீலிங் அம்மன் கோவிலில் சலசலப்பு

நங்கநல்லுார், சென்னை நங்கநல்லுார், 4வது பிரதான சாலையில் அமைந்துள்ளது, பனச்சியம்மன் கோவில். இக்கோவிலுக்கு சொந்தமான சர்வே எண்: 37ல் இருந்த 2.89 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டது. கோவில் குளம் மாநகராட்சியால், 1.26 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்டது.ஆனால், பனச்சியம்மன் கோவில் மட்டும் சிதலமடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில், நேற்று கோவில் சீலிங் சிமென்ட் காரை திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:நங்கநல்லுார் கிராம தேவதையான பனச்சியம்மன் கோவிலுக்கு சொந்தமாக, 100 கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. அதில், வருமானம் வருவதில்லை. ஆண்டிற்கு இருமுறை உண்டியல் திறந்து பணம் எடுத்து செல்லும் அலுவலர்கள், அதன்பின் திரும்பி கூட பார்ப்பதில்லை. கடைசியாக, 2005ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், கோவில் பராமரிப்பு பணிகள் கூட மேற்கொள்ளவில்லை.கடந்த புயல் மழைக்கு வேரோடு சாய்ந்த மரம் அகற்றப்படவில்லை.திரிசூலம் சிவன் கோவிலின் உபகோவிலான பனச்சியம்மன் கோவிலை, நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலுடன் இணைத்தால், பராமரிப்பு பணிக்கு வசதியாக இருக்கும்.இது தொடர்பாக, அறநிலையத்துறை இரு ஆண்டுகளுக்கு முன் கோவிலை இணைப்பதாக அறிவித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை