உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வண்டலுார் வந்தது வால்பாறை புலி

வண்டலுார் வந்தது வால்பாறை புலி

தாம்பரம், கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த முடீஸ் பகுதியில் முள்ளம்பன்றியை வேட்டையாடியதால், காயமடைந்த நிலையில் இருந்த, 1 வயது புலிக்குட்டியை, 2021, செப்., 28ல் வனத்துறையினர் மீட்டனர்.தேசிய புலிகள் ஆணையம் ஆலோசனையின்படி, வால்பாறையில் உள்ள மந்திரிமட்டம் பகுதியில் மூன்று ஆண்டுகளாக, அப்புலிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து, 3.6 வயதான புலியின் உடல் எடை அதிகரித்து, ஆரோக்கியமாக இருந்தது.இதையடுத்து, இந்த புலியை, வண்டலுார் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த 23ம் தேதி, வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு அப்புலி கொண்டு வரப்பட்டது.வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள விலங்குகள் புனர்வாழ்வு மையத்தில், அந்த புலியை அடைத்து பராமரித்து வருகின்றனர். மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இங்குள்ள சீதோஷண நிலைக்கு ஏற்ப தகவமைத்து கொண்டபின், முறையான அனுமதி கிடைத்த பிறகே, அப்புலி, பார்வைக்கு விடப்படும் என, பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை