உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் அழுத்தம் பிரச்னையால் வரதராஜபுரத்தில் கடும் அவதி

மின் அழுத்தம் பிரச்னையால் வரதராஜபுரத்தில் கடும் அவதி

பூந்தமல்லி, வரதராஜபுரம் ஊராட்சியில் மின்னழுத்த பிரச்னையால், அப்பகுதி வாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.பூந்தமல்லி ஒன்றியத்தில் வரதராஜபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு காமராஜர் தெரு, ராஜிவ் காந்தி தெரு, ஸ்டாலின் தெரு, மேட்டுத்தெரு, பாடசாலை தெரு, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்டவற்றில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், இங்கு, 15 நாட்களாக மின் அழுத்த பிரச்னையால், அப்பகுதி வாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோதை ஜெயராமன் கூறியதாவது: கடந்த 15 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் மின் அழுத்தம் பிரச்னை உள்ளது. குறைந்த மின் அழுத்தம், அதிக மின் அழுத்தம் என, மாறி மாறி வருவதால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வருகின்றன.இந்நிலையில், மின் அழுத்தம் பிரச்னையை சரிசெய்ய வேண்டும் என, நசரத்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.மேலும், கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைத்து, மின் அழுத்தம் பிரச்னையை சரிசெய்ய மின்வாரிய உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை