தாம்பரம், தேசிய ஜனநாயக கூட்டணியின், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி, த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில், நேற்று ஓட்டு சேகரித்தார்.அப்போது, அவர் கூறியதாவது:லேசான மழை பெய்தாலே, பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகள், பாதாள சாக்கடை கழிவில் மிதக்கும் நிலைமை தான் உள்ளன.தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த இடமில்லாததால் உட்புற சாலைகளிலும், ஜி.எஸ்.டி., சாலையிலும் நிறுத்துகின்றனர்.நான் வெற்றி பெற்றால், பல ஆண்டுகள் கோரிக்கையாக உள்ள, 'மல்டி லெவல்' வாகன நிறுத்தும் வசதி கொண்டு வருவேன்.தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டும் அடிப்படை வசதிகளில் பின்தங்கியுள்ள பம்மல், அனகாபுத்துார், திருநீர்மலை, பீர்க்கன்காரணை, பெருங்களத்துார் பகுதிகளை மேம்படுத்துவேன்.குடியிருப்போர் நலச்சங்கத்தினர், எந்த நேரத்திலும் என்னை அழைக்கலாம். தாம்பரம், பல்லாவரத்தில் நலச்சங்கங்களுடன் இணைந்து மக்கள் பணி செய்ய தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.