உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வியட்நாம் ஆமை, பறக்கும் அணில், வெள்ளை பாம்பு, சியமாங் குரங்கு சென்னை விமான நிலையத்தில் சிக்கிய அரிய வகை உயிரினங்கள்

வியட்நாம் ஆமை, பறக்கும் அணில், வெள்ளை பாம்பு, சியமாங் குரங்கு சென்னை விமான நிலையத்தில் சிக்கிய அரிய வகை உயிரினங்கள்

சென்னை, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கடந்த 10ம் தேதி 'தாய் ஏர் ஏசியா' விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.அதில் வந்த சென்னையைச் சேர்ந்த முகமது மீரா சர்தாரலி, 41, என்பவரின் உடைமைகளை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.இதில் நான்கு பெட்டிகளில் திறந்து பார்த்த போது, அரியவகை சிவப்பு பாத ஆமைகள், நான்கு கண் ஆமை, வியட்நாம் பெட்டி ஆமைகள் இருந்தன. பாம்பு, சுந்தா லெமூர் எனும் பறக்கும் அணில், சியமாங் குரங்கு குட்டி என, 22 அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்தது தெரியவந்தது.அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திய வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இந்த உயிரினங்களில் நோய் தொற்று இருந்தால், அது மனிதர்களையும் பாதிக்கும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட உயிரினங்கள் அனைத்தையும், அவற்றை எடுத்து வந்த விமானத்திலேயே, பாங்காக்கு திருப்பி அனுப்பினர்.இவற்றை கடத்தி வந்த முகமது மீரா சர்தார் அலியை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் தொடர் விசாரணை நடத்தினர். அதில், சென்னை, ரெட்டேரியை சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்காக, இவற்றை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரெட்டேரி, லட்சுமிபுரத்தில் உள்ள ரவிக்குமார் வீட்டிற்கு மத்திய வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் விரைந்தனர்.அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, 150 நட்சத்திர ஆமைகள், 50 இந்திய ஆமைகள் என, 200 ஆமைகள் இருந்தன. அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், வீட்டை பூட்டி சீல் வைத்தனர். தலைமறைவாக உள்ள ரவிக்குமாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

TSRSethu
ஆக 13, 2024 07:34

இது போன்ற கடத்தலில் ஈடுபடுவோரை பிணையின்றி ஒரு வருடமாவது சிறையில் தள்ளுங்கள் அபராதத்தோடு விட்டு விடாதீர்கள். ப்ளீஸ்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை