உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருநீர்மலை ஏரியை தன்னார்வலர்கள் துாய்மை

திருநீர்மலை ஏரியை தன்னார்வலர்கள் துாய்மை

திருநீர்மலை, குரோம்பேட்டை அடுத்த திருநீர்மலையில் பெரிய ஏரி உள்ளது. 194.01 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த ஏரி, ஆக்கிரமிப்பால் 146.94 ஏக்கராக குறைந்துவிட்டது.மேலும், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பல ஆண்டுகளாக ஏரியில் கலந்து மாசடைந்து வருகிறது.அதன் கரையில் சீமை கருவேல மரங்கள் மண்டியும், ஏரியினுள் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டும், ஆகாய தாமரை வளர்ந்தும் மோசமான நிலையில் உளளது.இந்த நிலையில், 'எக்ஸ்னோரா' அறக்கட்டளை மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் இணைந்து, இந்த ஏரியில் நேற்று, துாய்மை பணி மேற்கொண்டனர். 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஏரியில் கிடந்த 3 டன் குப்பை கழிவுகளை அகற்றினர். மாநகராட்சி ஊழியர்கள் வந்து, அவற்றை எடுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை