உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவர்களுக்கு வாந்தி, பேதி விடுதி கேன்டீனுக்கு சீல்

மாணவர்களுக்கு வாந்தி, பேதி விடுதி கேன்டீனுக்கு சீல்

சென்னை, சென்னை வேப்பேரியில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வந்த எட்டு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் திடீரென வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டது. மேலும், 11 மாணவர்களுக்கு காய்ச்சலும் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் குறித்து, மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பி.சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், பாலிடெக்னிக் கல்லுாரி விடுதியில் நேற்று சோதனை செய்தனர். அப்போது, மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் கேன்டீன் முறையாக பராமரிப்பின்றியும், சுகாதாரமின்றியும் மிக மோசமான நிலையில் இருந்தது. அங்கிருந்த உணவு பொருட்கள் அழுகிய நிலையிலும், குடிநீர் அசுத்தமாகவும் இருந்துள்ளது. இதனால், கேன்டீனுக்கு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.இதுகுறித்து, நியமன அலுவலர் பி.சதீஷ்குமார் கூறியதாவது:அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லுாரியில் கேன்டீன் நடத்துவோர், மிகவும் அசுத்தமான முறையில் பராமரித்துள்ளனர். இதனால், அந்த கேன்டீன் மூடப்பட்டுள்ளது. அதேநேரம், மாணவர்களுக்கு வெளியில் இருந்து உணவு தயாரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பராமரித்து வருபவரை நீக்கி விட்டு, நன்றாக பராமரிக்கும் மற்றொருவருக்கு, டெண்டர் வழங்கவும், கல்லுாரி நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை