உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / யு டியூப் சேனல் ஆசையா? நாளை முதல் பயிற்சி துவக்கம்!

யு டியூப் சேனல் ஆசையா? நாளை முதல் பயிற்சி துவக்கம்!

சென்னை, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னையில் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகத்தில், பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, பயிற்சி வகுப்பு நடக்கும்.இப்பயிற்சியில், யு டியூப் சேனல் உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ேஷா உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து விளக்கப்படும்.பயிற்சியில், 18 வயதுக்கு மேற்பட்ட, ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி குறித்த கூடுதல் விபரங்களை, www.editn.inஇணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, 86681 00181, 98413 36033 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு அவசியம். பயிற்சியாளர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ