உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தடுப்பு கற்கள் அமைக்கும் பணி மீண்டும் உயிர்பெறுவது எப்போது?

தடுப்பு கற்கள் அமைக்கும் பணி மீண்டும் உயிர்பெறுவது எப்போது?

நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 18 வார்டுகளில் உள்ள நடைபாதையில், வாகனங்கள் நிறுத்தாத வகையில் தடுப்பு கற்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.ஆனால், சில இடங்களில் தடுப்பு கற்கள் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. குறிப்பாக, நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் தடுப்பு கற்கள் அமைக்கும் பணியை, மாநகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதி வாசிகள் கூறியதாவது: இந்த சாலையில் இயங்கி வரும் சில வணிக நிறுவனங்களுக்கு என, தனியாக வாகன நிறுத்தம் ஏதும் கிடையாது. இங்கு வருவோர் நடைபாதையை தான் வாகன நிறுத்தமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மாநகராட்சி நிர்வாகம் நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கும் வகையில், தடுப்பு கற்கள் அமைக்கும் பணியை துவக்கியபோது வரவேற்றோம்.ஆனால், தற்போது பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை