மேலும் செய்திகள்
டூ - வீலரில் சென்றவர் அரசு பஸ் மோதி பலி
24-Aug-2024
பஸ்சில் மோதிய பைக் தனியார் ஊழியர் பலி
29-Aug-2024
வடபழனி, வேளச்சேரி, நேரு நகரைச் சேர்ந்தவர் பெருமாள், 65. இவரது மனைவி பூமி, 55. இவர்கள், 'ஹீரோ ஸ்ப்ளெண்டர்' பைக்கில், நேற்று மாலை வடபழனி 100 அடி சாலை வழியாக வேளச்சேரிக்கு சென்றனர்.அப்போது, பின்னால் வந்த 'அசோக் லேலண்ட்' மினி லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.இந்த விபத்தில், பூமியின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெருமாளுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது.அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார், பூமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து ஏற்படுத்திய ஆலப்பாக்கம், லட்சுமி நகரைச் சேர்ந்த ரஞ்சித், 24, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
24-Aug-2024
29-Aug-2024