உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சத்துடன் பெண் கைது

சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சத்துடன் பெண் கைது

சென்னை : சென்னை, சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூருக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், நேற்று முன்தினம் இரவு தயார்படுத்தப்பட்டது.இதில் பயணிப்போர் மற்றும் அவர்களது உடைமைகளை, பாதுகாப்பு அதிகாரிகள் சோதித்து அனுப்பினர்.இதில், சென்னையைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர், சுற்றுலா பயணியாக இந்த விமானத்தில் சிங்கப்பூருக்கு செல்வதற்காக வந்தார்.அவரது சூட்கேசை 'ஸ்கேன்' செய்ததில், 500 ரூபாய் நோட்டு கட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து, அந்த பெண்ணின் சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தனர்.அதோடு, சூட்கேஸைத் திறந்து, ரகசிய அறையில் மறைத்து வைத்திருந்த 40 கட்டுகளில் 20 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த பெண்ணையும் கைது செய்தனர். சிங்கப்பூரில் இருக்கும் நபரிடம் 20 லட்சம் ரூபாய் கொடுத்தால், 10,000 ரூபாய் தருவதாக ஒருவர் கூறியதால், அப்பணத்தை எடுத்து வந்ததாக, அப்பெண் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி