உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமணமாகி எட்டு மாதத்தில்   பெண் தற்கொலை   

திருமணமாகி எட்டு மாதத்தில்   பெண் தற்கொலை   

சித்தாலப்பாக்கம்:மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம், கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு, 28. எலக்ட்ரீசியன். இவரது மனைவி மகேஸ்வரி, 25. தம்பதிக்கு திருமணமாகி எட்டு மாதங்களே ஆகின்றன.இந்நிலையில், பாலுவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் மகேஸ்வரி சந்தேகப்பட்டுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது.கடந்த 20ம் தேதியும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த பாலு, மனைவி மகேஸ்வரியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை மனைவியை திரும்ப அழைத்துச் செல்ல வந்த போதும், தகராறு ஏற்பட்டுள்ளது.கணவர் கோபித்து திரும்பிச் சென்றதால், மகேஸ்வரி தன் அறையைப் பூட்டி, அழுதபடி இருந்துள்ளார். அவரது பெற்றோர், வெகுநேரம் தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மின்விசிறி கொக்கியில் துாக்கு போட்டு தொங்கியபடி இருந்துள்ளார்.மகேஸ்வரியை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், மகேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். தவிர, திருமணமாகி எட்டு மாதங்களே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி