உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்திய வாலிபர் கைது

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்திய வாலிபர் கைது

சென்னை:ஒடிசாவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வழக்கம் போல, ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, நேற்று முன்தினம் மாலை நான்காம் நடைமேடையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய வாலிபர் மீது சந்தேகம் எழுந்தது.அவரது உடமைகளை சோதனை செய்ததில், 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிரிஜா காந்தா மாஜி, 28, என்பதும், ரயிலில் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ