உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரியாணி சாப்பிட்ட 10 பேருக்கு பாதிப்பு

பிரியாணி சாப்பிட்ட 10 பேருக்கு பாதிப்பு

கொடுங்கையூர், கொடுங்கையூரில் உள்ள எஸ்.எஸ்., பிரியாணி அசைவ ஹோட்டலில் சிலர், 16ம் தேதி பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.இதில், 10க்கும் மேற்பட்டோருக்கு, நேற்று முன்தினம் இரவு முதல், அடுத்தடுத்து, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.உடல் நலம் பாதிக்கப்பட்டோர், வீட்டருகேயுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அன்றைய தினம், பிரியாணி வாங்கி சாப்பிட்ட வேறு யாரேனும் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனரா என்பது குறித்து, கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ