உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வீடு புகுந்து 10 சவரன் நகை திருட்டு

 வீடு புகுந்து 10 சவரன் நகை திருட்டு

மீஞ்சூர்: வடசென்னை அனல் மின் நிலையத்தில், உதவி பொறியாளராக பணிபுரிந்து வருபவர் எக்லவிய குமார், 32. இவர், வல்லுார் பகுதியில் உள்ள அனல்மின்நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டி, குடும்பத்தினருடன், மத்திய பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். கடந்த 22ம் தேதி வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து, 10 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி