உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஆதிபுரீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

 ஆதிபுரீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, 1,008 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில், சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் நடப்பது உண்டு. இந்த மாதத்தில் ஐந்து திங்கட்கிழமைகள் வருகின்றன. முதல் திங்கட்கிழமை பிரதோஷ நாளானது, சங்குகளில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அந்த வகையில் இரண்டாவது திங்களான நேற்று, 1,008 சங்குகளால் அபிஷேகம் நடந்தது. சங்காபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி