உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பார்த்தசாரதி சுவாமி சபா 124வது ஆண்டு விழா

பார்த்தசாரதி சுவாமி சபா 124வது ஆண்டு விழா

ஆழ்வார்பேட்டை:சென்னை, ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையிலுள்ள நாரத கான சபாவில் நேற்று மாலை, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவின் 124வது ஆண்டு விழாவில், கர்நாடக இசை பாடகியர் ரஞ்சனி-, காயத்ரியின் ராம பஜனாவில், ஸ்ரீ ராமர் குறித்து பாடும் வாய்ப்பாட்டு கச்சேரி நடந்தது.இந்த வாய்ப்பாட்டு கச்சேரியில் சாருமதி ரகுமானின் வயலின், கச்சேரிக்கு வலு சேர்த்தது. சாய் கிரிதரின் மிருதங்கம், கிருஷ்ணாவின் கடம், அரங்கில் உள்ளவர்களை கைதட்ட வைத்தது.ரஞ்சனி- காயத்ரியின் சரிகம பதநியோடு வரும் பாட்டுக்கு, ரசிகர்கள் மெய்மறந்தனர். ரசிகர்களின் கூட்டத்தால் அரங்கம் நிறைத்தது. முன்னதாக, சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற நல்லி குப்புசாமி, பாரதிய வித்யா பவன் தலைவர் ரவி, முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி ஆகியோர், ஆண்டு விழாவை துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை