மேலும் செய்திகள்
மகளிடம் பாலியல் அத்துமீறல் போக்சோவில் தந்தை கைது
30-Apr-2025
பல்லாவரத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்
23-Apr-2025
பல்லாவரம், பல்லாவரம் அருகே, பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த சிறுவன், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளான். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான்.அதோடு, தன் நண்பர்கள் சிலரையும் சிறுமியிடம் அறிமுகம் செய்து வைத்து, மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட வைத்துள்ளான்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=77aece53&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுமி, தனிமையில் சோகமாக இருந்துள்ளார். இதை கவனித்த பெற்றோர், சிறுமியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக, மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆறு சிறுவர்கள் மற்றும் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த நந்தகுமார், 19, சஞ்சய், 19, முடிச்சூரைச் சேர்ந்த சூர்யா, 22, மற்றும் சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை தடுக்க தவறிய சிறுமியின் தாய் என, 13 பேரை, நேற்று முன்தினம், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
30-Apr-2025
23-Apr-2025