உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 130 கஞ்சா சாக்லேட் ஜாம்பஜாரில் பறிமுதல்

130 கஞ்சா சாக்லேட் ஜாம்பஜாரில் பறிமுதல்

கீழ்ப்பாக்கம்,:அண்ணா சாலை, ஜாம்பஜார், குப்பு முத்து முதலி தெருவில், சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட்கள் விற்கப்படுவதாக, கீழ்ப்பாக்கம் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று காலை சம்பவ இடத்தில் உள்ள நொறுக்கு தீனி கடை அருகே, ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, கடையில் கஞ்சா சாக்லேட் விற்றது உறுதியானது. இதையடுத்து, கஞ்சா சாக்லேட் விற்ற ஜாம்பஜாரைச் சேர்ந்த ராஜேஷ், 22, என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்து, 730 கிராம் எடையிலான 130 கஞ்சா சாக்லேட்கள், 420 கிராம் எடை கொண்ட போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி