மேலும் செய்திகள்
இளம்பெண்ணை விடுதிக்கு அழைத்த போலீஸ்காரர் கைது
08-May-2025
ஆவடி :ஆவடி தாசில்தார் அலுவலகத்தில், இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி முகாம் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, ஆவடி உள்வட்டத்திற்கு உட்பட்ட பருத்திப்பட்டு, பாலேரிபட்டு, விளிஞ்சியம்பாக்கம், சோராஞ்சரி, தண்டுரை உள்ளிட்ட பகுதிவாசிகள் பங்கேற்றனர். இதில், புதிய பட்டா, பட்டா மாறுதல், ஜாதி மற்றும் இருப்பிட சான்றிதழ், முதியோர் உதவி தொகை சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ், 142 மனுக்கள் பெறப்பட்டன.முகாமில், ஆவடி தாசில்தார் காயத்ரி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முகாம் 27ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. முகாமில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து, உரிய தீர்வு காணப்பட உள்ளது.
08-May-2025