உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிளாம்பாக்கம் - திருவான்மியூருக்கு கூடுதலாக 2 ஏசி பஸ்கள்

கிளாம்பாக்கம் - திருவான்மியூருக்கு கூடுதலாக 2 ஏசி பஸ்கள்

சென்னை, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவான்மியூருக்கு, கூடுதலாக இரண்டு, 'ஏசி' பேருந்துகளின் சேவை நேற்று துவங்கப்பட்டது.கிளாம்பாக்கத்தில் இருந்து திருவான்மியூர் செல்லும், '91 கே' வழித்தடத்தில்,ஏற்கனவே இரண்டு, 'ஏசி' பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், பயணியர் தேவை அதிகமாக இருப்பதால், கூடுதலாக, 'ஏசி' பேருந்துகளை இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, இந்த தடத்தில் நேற்று முதல் இரண்டு, 'ஏசி' பேருந்துகளின் சேவை துவங்கப்பட்டுள்ளது என, மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ