உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமியிடம் அத்துமீறிய நபருக்கு 20 ஆண்டு

சிறுமியிடம் அத்துமீறிய நபருக்கு 20 ஆண்டு

சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த தம்பதியின் வீட்டில், மெரினா கடற்கரையில் உள்ள கடையில் பணிபுரியும், 45 வயதான நபர் வசித்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவர், கடந்த 2023 ஜூன் 23ல், விளையாடி கொண்டிருந்த வீட்டு உரிமையாளரின் 4 வயது குழந்தையிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.விசாரித்த மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் அந்த நபரை கைது செய்தனர்.வழக்கு, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி, 'குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 100 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 5 லட்சம் ரூபாயை அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்' என, தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ