உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புழல் ஏரியில் 200 கன அடி நீர் திறப்பு

புழல் ஏரியில் 200 கன அடி நீர் திறப்பு

புழல்: பூண்டி ஏரி மற்றும் மழை நீர் வரத்தால், நேற்று மதியம், நீர்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில், புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதையடுத்து உபரி நீர் கால்வாய் அருகே உள்ள நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், மணலி மற்றும் சடையன்குப்பம் பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள், எச்சரிக்கையுடன் இருக்கும்படி திருவள்ளூர் கலெக்டர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ