உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கபாலீஸ்வரர் கல்லுாரியில் நேர்காணல் 206 மாணவர்களுக்கு கிடைத்தது வேலை

கபாலீஸ்வரர் கல்லுாரியில் நேர்காணல் 206 மாணவர்களுக்கு கிடைத்தது வேலை

சென்னை, கொளத்துார் கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்த வளாக நேர்காணலில் தேர்வான, 206 மாணவ, மாணவியருக்கு, தனியார் நிறுவனங்களில் பணி நியமன உத்தரவை, அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பேசியதாவது:கபாலீஸ்வரர் கோவில் சார்பில், கொளத்துாரில் துவக்கப்பட்ட கலை, அறிவியல் கல்லுாரி, நான்காம் ஆண்டை நிறைவு செய்துள்ளது.இந்த கல்லுாரி மாணவர்கள், கடந்தாண்டு வளாக நேர்காணல் வாயிலாக, 141 மாணவ, மாணவியரும்; இந்தாண்டு, 206 பேரும் தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கிறோம். இக்கல்லூரிக்கு, 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடம் விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அறநிலையத்துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை