உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2வது சம்பவம் மின்சாரம் பாய்ந்து மாடு பலி

2வது சம்பவம் மின்சாரம் பாய்ந்து மாடு பலி

அரும்பாக்கம், அரும்பாக்கம், முத்துமாரியம்மன் கோவில் தெருவில், நேற்று முன்தினம் நள்ளிரவு, மழைநீர் தேங்கி இருந்தது.அத்தெருவில், அதே பகுதியில் வசிக்கும் ஜெகதீஷ் என்பவருக்கு சொந்தமான பசு மாடு, நள்ளிரவு நடந்து சென்றது. குடியிருப்பில் தேங்கிய மழைநீரில் மாடு சென்றபோது, தரைவழியாக மின்சாரம் பாய்ந்து, அதே இடத்திலேயே மாடு துடிதுடித்து இறந்தது.அக்கம் பக்கத்தினர், உடனடியாக மின் வாரியத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வாரியத்தினர், அருகில் இருந்த இரு வீடுகளில், மின் இணைப்பை துண்டித்து, மாட்டை அப்புறப்படுத்தினர்.நேற்று காலை சம்பவம் நடந்த பின், பள்ளம் தோண்டி, மின்வடத்தை முறையாக புதைத்தனர்.இதே பகுதியில், கடந்த மாதம் சாலை அமைக்கும் போது, புதைக்கப்பட்ட மின்வடம் சேதமடைந்தது. அப்போது, மின் வடத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து, பசு மாடு மற்றும் ஒரு நாய் இறந்தது.மின் கசிவால் கால்நடைகள் உயிரிழப்பது, அரும்பாக்கத்தில் தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை