| ADDED : ஜன 20, 2024 12:44 AM
சென்னை, மாநில அளவிலான இலக்குப் பந்து போட்டியில், தமிழக ஆடவர் அணியினர், இரண்டாமிடம் பிடித்தனர்.பாரதிய இலக்குப் பந்து கழகத்தின் சார்பில், முதலாவது இளையோர் பிரிவில், மாநிலங்களுக்கு இடையிலான இலக்குப் பந்து போட்டி, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத், சித்திபேட்டை பகுதியில் நடந்தது. இதில், ஆண்கள் பிரிவில் 26 அணிகளும், பெண்கள் பிரிவில் 14 அணிகளும் பங்கேற்றன. போட்டிகள்,'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் நடந்தன.ஆண்கள் பிரிவில், தமிழக அணியினர் திறமையாக விளையாடி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், தமிழக மற்றும் தெலுங்கானா அணிகள் மோதின.அதில் தமிழக அணி, 11 - 13 என்ற கணக்கில், தெலுங்கானா அணியிடம் தோல்வியை தழுவி, இரண்டாம் இடத்தை பிடித்தது.பெண்கள் பிரிவில் தமிழக அணி, காலிறுதியில் மஹாராஷ்டிரா அணிக்கு எதிராக விளையாடி, 1 - 2 என்ற இலக்கில் தோல்வியை தழுவியது.தமிழக வீரர் ஜெகதீஷ் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பெற்றார். போட்டியில் சிறப்பாக பங்கேற்று விளையாடி, தமிழக வீரர், வீராங்கனையரை இலக்குப் பந்து சங்கத்தினர் பாராட்டினர்.