உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3 கிலோ போதை பொருட்கள் ஏர்போர்ட்டில் பறிமுதல்

3 கிலோ போதை பொருட்கள் ஏர்போர்ட்டில் பறிமுதல்

சென்னை, ங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு, 'ஸ்கூட்' ஏர்லைன்ஸ் பயணியர் விமானம் வந்தது.இதில் வந்த, இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த அகமது இட்ரீஸ், 28, என்ற வாலிபரை பிடித்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர்.இவரது உள்ளாடை, உடைமைகளில் போதைப் பவுடர் இருந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து 3 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட து.இந்த போதை பொருள் 'கொக்கைன்' பவுடராக இருந்தால், இதன் சர்வதேச மதிப்பு 15 கோடி ரூபாய். மெத் ஆம்பெட்டமைன் ஆக இருந்தால் 3 கோடி ரூபாய் இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக கடத்தப்பட்டது என, அந்த வாலிபரிடம் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ